ஆஹா! பிரட்டை வைத்து சில்லி செய்யலாமாம்..!

Lifestyle

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காலை உணவு என்றால் பிரட்டு தான்.

பிரட்டை  வைத்து பிரட் ரோஸ்ட், பிரட் ரோல் போன்றவற்றை செய்து ருசித்திருப்போம்.

அந்த வகையில்இன்று பிரட்டை வைத்து பிரட்  சில்லி செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிரட் =6 குடைமிளகாய் =1 வெங்காயம் =2 தக்காளி =2 பச்சை மிளகாய் =4 காய்ந்த மிளகாய் =4 இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன் சீரகம் =1/2 ஸ்பூன் மிளகாய் தூள் =1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன் கரம் மசாலா =1 ஸ்பூன் கொத்தமல்லி இலை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு

தேவையான பொருட்கள் :

முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாகி சிறிதளவு எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.

செய்முறை:

ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,இஞ்சி பூண்டு,பச்சைமிளகாய்,காய்ந்தமிளகாய்,கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்,

பிறகு வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், அப்போதுதான் சுவையாக இருக்கும்.

பிறகு மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கிளறி தக்காளி மற்றும் உப்பையும் சேர்த்து எண்ணெய்  பிரிந்து வரும் வரை கிளறி விடவும்.

அதன் பிறகு குடைமிளகாயை சேர்த்து கிளறி பிரட்டையும் சேர்த்து மசாலா படும்படி கலந்து விடவும்.

 ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான ரெட் சில்லி ரெடி.

உங்கள் ஸ்கின் டைப் என்னன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்போ இந்த பதிவை படிங்க.!