ஐபிஎல் அதிரடிகள்.! மும்பை சென்ற ஹர்திக் பாண்டியா..! கேப்டனாக மாறிய சுப்மன் கில்.!  

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

அதற்கு முன்னதாக, வீரர்களை அணிகளுக்குள் மாற்றிக் கொள்ளும் முறை, விடுவிக்கும் முறை என ஐபிஎல் அணிகள் விறுவிறுப்பாக நிறைவு செய்துள்ளன.

நேற்று கடைசி நாள் என்பதால், எந்த அணி, எந்த வீரர்களை விடுவித்துள்ளது, எந்த அணி வீரர்களை வாங்கியுள்ளது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. 

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை பிசிசிஐ-இடம் ஒப்பந்த விவரங்களை இரு அணிகளும் அளித்துள்ளன. 

அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா திரும்பியுள்ளார்.  

அதனால் குஜராத் அணிக்கு புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இரு அறிவிப்புகளையும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர். 

அதே போல, மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த கேமரூன் கிரீனை பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

IPL 2024: குஜராத் டைட்டன்ஸில் இருந்து மும்பை இந்தியன்ஸ் திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா.!