அழகான சிரிப்பில் ரசிகர்களை மயக்கிய ரெஜினா! லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர்.
அழகிய அசுர, சிவா மனசுலோ ஸ்ருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம் போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வளர்ந்து வருகிறார்.
ரெஜினா தற்போது பல திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மற்றும் ஹீரோயினாக பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இதற்கிடையில் அட்டகாசமாக உடை அணிந்து கொண்டும் அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
அவர் வெளியீட்டு இருந்த அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கத்தரிப்பூ நிறம் உடை அணிந்து கொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார்.
புகைப்படங்களை பார்த்த பலரும் உங்களுடைய புகைப்படங்கள் சூப்பர் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும், நடிகை ரெஜினா கசாண்ட்ரா தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதைப்போலவே, கான்ஜுரிங் கண்ணப்பன், ஃப்ளாஷ்பேக், செக்ஷன் 108 -ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.