Cinema

பட்டுப்புடவையில் பரவசம்.! கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்.!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம்,  என பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ரஜினியின் பேட்ட படத்தில் தங்கையாக நடித்ததன் மூலம் அறிமுகமான இவர், விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார்.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறினார். இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை.

இப்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும், தங்கலான் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதற்கு இடையில் கவர்ச்சியான உடை அணிந்து, புகைபடமெடுத்து அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

அதைத்தொடர்ந்து, தற்போது ரோஸ் மற்றும் சிவப்பு என இரட்டை நிற பட்டுப் புடவையில், அம்சமான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மாளவிகா மோகனன்-ஐ அழகு சிலை, அழகு ராணி என்று வர்ணித்து வருகின்றனர்.

மேலும், விக்ரமுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியாக உள்ளது.

த்ரிஷா நல்ல நடிகை! நான் ஒன்னும் தண்ணி அடிச்சிட்டு பீச்சுல ஆடல.. மன்சூர் அலிகான் பரபரப்பு!