கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Tamilisai Soundararajan

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது. இதனால் … Read more

தங்கச்சி கிடையாது தம்பி தான்! கில்லி படத்தை மிஸ் செய்த அழகி பட பிரபலம்?

Ghilli sister

Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஆஷிஷ் வித்யார்த்தி, பிரகாஷ் ராஜ், தாமு, நாகேந்திர பிரசாத், ஜானகி சபேஷ், மயில்சாமி, நான்சி ஜெனிபர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள். இந்த கில்லி திரைப்படம் … Read more

ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

EVM Machine

supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, விவிபாட் இயந்திரங்களின் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என … Read more

ஏழைகளுக்கான சொத்து பகிர்வு.., அமெரிக்காவை பின்பற்றும் காங்கிரஸ் வாக்குறுதி.?  

Sam Pitroda - Rahul Gandhi

Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இந்த வார வெள்ளிகிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை … Read more

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

P V Anvar

Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 21 மாநிலங்களில் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான அனல் பறக்கும் … Read more

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Deepak Parambol

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த நிலையில், இன்று திருணம் செய்து கொண்டனர். மாப்பிள்ளை வேற யாருமல்ல மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்போல் தான். அவருக்கும் அபர்ணா தாஸுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்த நிலையில், இன்று இவர்களது திருமணம் இன்று (ஏப்ரல் 24) புதன்கிழமை அதிகாலை குருவாயூர் கோவிலில் மிக … Read more

நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

priyanka gandhi modi

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் … Read more

எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம்… ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய நடப்பு சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று, லீக் சுற்றின் இரண்டாம் பாதியில் அனைத்து அணிகளும் விளையாடி வருகிறது. அந்தவகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 210 ரன்களை அடித்தது. இதில் … Read more

சேலம் – ஈரோட்டில் 108 டிகிரி அளவுக்கு கொளுத்திய வெயில்…மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தல்.!

heat wave

Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதில், அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலத்தில் 108.14° பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு மற்றும் சேலத்தில் வெப்ப அலை வீசியதாகவும், … Read more

இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!

second phase ends today

LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. 2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் போட்டியிட கடந்த 3ம் தேதி அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் புயலாய் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான … Read more