அடிபிடித்த பாத்திரங்கள் ஐந்தே நிமிடத்தில் பளபளக்க சூப்பரான 5 டிப்ஸ் இதோ.!

Lifestyle

சமையல் பாத்திரம் கழுவுவது பெண்களுக்கு வீட்டு வேலைகளில் மிகவும் சிரமமானது,  அதிலும் கரி (ம) அடி பிடித்த பாத்திரங்களை கழுவுவது இன்னமும் கஷ்டம்.

சமையல் செய்தவுடன் பாத்திரங்களை சீக்கிரம் கழுவுவதும் நல்லது. அப்போது, கரி மற்றும் அடி பிடிப்பதற்கான வாய்ப்பு குறைவு.

ஆனால், அப்படியும் கரி பிடித்திருந்தால், அதை எளிதாக நீக்க சில டிப்ஸ்களை இந்த பதிவில் நாம் காணலாம்.

பேக்கிங் சோடா (ம) வினிகர் சேர்த்து, பாத்திரங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் சோப்பு போட்டு கழுவ கரி (ம) அடி பிடித்தது எளிதாக நீங்கும்.

பேக்கிங் சோடா மற்றும் வினிகர்:

எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் சோப்பு போட்டு கழுவ பாத்திரங்களில் உள்ள கரி (ம) அடி பிடித்ததை நீக்க உதவும்.

எலுமிச்சை பழம்:

சூடான தண்ணீரில் பாத்திரங்களை சோப்பு போட்டு கழுவுவதால் கரி மற்றும் அடி பிடித்ததை நீக்கலாம்.

சூடான தண்ணீர்:

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் உப்பு மற்றும் சோப்பு போட்டு நன்றாக பாத்திரத்தை கழுவ கரி எளிதில் போய்விடும்.

உப்பு:

சமையல் பாத்திரங்களை கழுவுவதற்கு கடற்பாசிகளை பயன்படுத்தலாம் என்று நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று.

கடற்பாசி:

நீங்கள் பாத்திரம் கழுவும் பொழுது கடற்பாசியில் சோப்பு போட்டு கழுவுவதாலும் அடி பிடித்ததை நீக்கலாம்.

இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், சமையல் செய்த பாத்திரங்களை எளிதாக கழுவ முடியும்.

அடடே! நம் குழம்பில் சேர்க்கும் புளிக்கு இவ்வளவு மகத்துவமா?