அட்சய திருதியை நாள்..!இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்…!!

அட்சய திருதியை நாள்..!இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்…!!

சித்திரை மாதத்தில் வரும் அட்சய திருதியை நாளான இன்று கல் உப்பு வாங்கினால் செல்வம் பெருகும்.

சித்திரை மாதத்தில் அமாவாசை முடிந்து மூன்றாம் நாளில் வளர்பிரையன்று வரும் திருதியை நாளே அட்சய திருதியாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக,இந்த நாளில் மக்கள் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வாங்குவார்கள்.

ஏனெனில்,அட்சயம் என்றால் குறையாது,தேயாது மற்றும் வளர்தல் என்று பொருள்.எனவேதான்,இந்நாளில் அதிக விலையுர்ந்த பொருட்களை மக்கள் வாங்குவர்.

அவ்வாறு,விலையுயர்ந்த பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்க முடியவில்லை எனில்,எல்லோரும் எளிதில் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும் வீட்டில் செல்வமும்,ஐஸ்வர்யமும் பெருகும்.

அதாவது,அட்சய திருதியையன்று பூஜை அறையில் ஒரு மனைப் பலகையை வைத்து அதன்மேல் ஒரு வாழை இலையினை வைக்க வேண்டும்.அதன்பிறகு,பச்சரிசியை வாழை இலையின் நடுவே பரப்பி மாவிலை மற்றும் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்க வேண்டும்.மேலும்,ஒரு டம்ளரில் நெல்லை வைக்க வேண்டும்.

இதனையடுத்து,லட்சுமி,குபேரன் படம் இருந்தால் அதனை அலங்கரித்து வைக்க வேண்டும்.அதன்பின்,மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலப்பக்கமாக வைத்து,அதன் அருகில் வாங்கிய பொருள் எதுவாக இருந்தாலும் நடுவில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும்.

குறிப்பாக,அட்சய திருதியை நாளில் லட்சுமி மற்றும் குபேரனின் கதையைப் படிப்பது,பிறருக்கு சொல்வது ஆகியவை செல்வம் பெருக மிகவும் சிறந்த வழியாகும்.

 

Join our channel google news Youtube