கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு அதிமுக கண்டனம்.
ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் 15 பேரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்கவுள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குரல் பதிவு தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என தெரிவித்தார்.
இதன்பின் பேசிய அவர், அண்ணாமலையாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியே ஆக வேண்டும், கர்நாடகாவில் நடைபெற்ற அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதித்தது குறித்து கருத்து தெரிவித்தார். மேலும், கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை பத்தியில் நிறுத்தியது மிகவும் தவறு. இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
மேலும், அதிமுகவை விமார்சித்தல் நங்கள் பதிலடி தருவோம் எனவும் குறிப்பிட்டார். அதாவது, அதிமுக குறித்து விமர்சனம் செய்யும் பாஜக நிர்வாகிகளை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டிக்க வேண்டும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், நாங்களும் எதிர்வினை ஆற்றுவோம் என தெரிவித்தார்.