Wednesday, November 29, 2023
Homeகிரிக்கெட்டாஸ் தோற்றால் கோப்பை நமக்கே... வரலாறு சொல்லும் கதை..!

டாஸ் தோற்றால் கோப்பை நமக்கே… வரலாறு சொல்லும் கதை..!

நடப்பு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

டாஸ் தோல்வி: 

உலகக்கோப்பையில் இந்திய அணி இன்றைய இறுதிப் போட்டி உடன் சேர்த்து மொத்தமாக நான்கு முறை இறுதிப்போட்டியில் வந்துள்ளது. இதில் இரண்டு உலகக்கோப்பையில் டாஸ் இழந்துள்ளது. இந்திய அணி டாஸ் இழந்த 2011 மற்றும் 1983 இரண்டு உலகக்கோப்பையிலும் இந்தியா  கோப்பையை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணி டாஸ் தோல்வியடைந்துள்ளதால் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று கோப்பையை  கைப்பற்றும்  என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இன்றைய ஆட்ட முடிவில் தான் யாருக்கு வெற்றி என்பது தெரியவரும்.

1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில்  இந்தியா டாஸ் இழந்தது.
2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றது.
2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் இழந்தது.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் இழந்தது.

தடுமாறும் இந்திய அணி:

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய முதல் ரோஹித் அதிரடியாக விளையாட மறுபுறம் சுப்மன் கில் நிதானமாக விளையாட  இருப்பினும் ஐந்தாவது ஓவரின் 2-வது பந்தில் சுப்மன் கில் 4 ரன்  எடுத்து விக்கெட் இழந்தார்.

இதன்முலம் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடிய 4 போட்டிகளில்  3 முறை சுப்மன் கில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிடம் அவுட் ஆகி உள்ளார்.  அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா சிக்ஸ் அடிக்கும் முயன்ற போது மெர்சல் ஓவரில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்சை கொடுத்து அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வந்த வேகத்தில்  4 ரன்னில் வெளியேறினார். தற்போது களத்தில் கே.எல்  ராகுல் , விராட் கோலி இருவரும் விளையாடி வருகின்றனர்.  இந்திய அணி 12 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.