கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம்!

மிகவும் சுலபமாகவும், மலிவாகவும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யா. இந்த பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் எக்கச்சக்கமாக உள்ளது. அவைகளை இங்கு பார்ப்போம்.

கொய்யா பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள்

ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக இருக்கும் கொய்யா பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. கருவுறுதலுக்கு ஏற்ற அதிக ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பமாக விரும்புபவர்களுக்கு மிகவும் நல்லது.

இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்த அளவினை சீராக்குகிறது. வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட கொய்யாவில் தான் அதிகம் உள்ளது. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மலச்சிக்கலை தடுத்து பார்வை நரம்புகளுக்கு வலு அளிக்கிறது. வைட்டமின் பி 9 அதிகம் உள்ளதால் கர்பிணிகளுக்கு குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிகிறது.

author avatar
Rebekal