30 C
Chennai
Thursday, October 21, 2021

லக்கிம்பூர் அநீதி வழக்கில் நமக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன…! – ராகுல் ட்வீட்

லக்கிம்பூர் அநீதி வழக்கில் நமக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன. ஒன்று சரியான நீதி விசாரணை, மற்றோன்று மத்திய உள்துறை இணையமைச்சரின் உடனடி பதவி நீக்கம்.

உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில், மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினர். இதனையடுத்து, இன்று லக்கிம்பூர் வன்முறையில் நியாயமான விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரியும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இதையடுத்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குற்றம் நடந்த பிறகு அரசாங்கமும் நிர்வாகமும் அநீதி இழைக்க முற்படும்போது நாம் நம்முடைய உரிமைக்குரலை எழுப்ப வேண்டும். லக்கிம்பூர் அநீதி வழக்கில் நமக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன. ஒன்று சரியான நீதி விசாரணை, மற்றோன்று மத்திய உள்துறை இணையமைச்சரின் உடனடி பதவி நீக்கம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More