marimuthu

ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம் – மாரிமுத்து மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

By

திரைப்பட இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் இருந்து நடிகர் மாரிமுத்துவின் உடல், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரபலங்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது X தள பக்கத்தில், இரங்கல் செய்தியை பகிர்ந்து கொண்டார்.

அவரது குறிப்பில், தனித்துவம் மிக்க நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான மாரிமுத்து, அகால மரணம் அடைந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் கொண்டேன். ஒரு நல்ல கலைஞனை இழந்துவிட்டோம், அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.