ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் – முதல்வர் யோகி ஆத்யநாத்

ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் – முதல்வர் யோகி ஆத்யநாத்

ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது.

இன்று அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில் ராமஜென்ம பூஜையில் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

இதன் பின்னர், பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், அறக்கட்டளைத் தலைவர் மஹந்த் நிருத்யகோபால் தாஸ், சங்கத் தலைவர் மோகம் பகவத் ஆகியோர் மேடையில் அமர்ந்தனர்.

இந்நிலையில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேடையில் பேச தொடங்கினார் அப்போது அவர் கூறுகையில்,” இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. ராமர் கோயில் கட்டுவதற்கான நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது.  இந்த ராமர் கோயில் கட்ட 500 ஆண்டுகளாக காத்திருந்தோம் என்று கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube