திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்…! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ

By

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்  என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
ஜனவரி 28-ஆம் தேதி திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.அதேபோல் ஜனவரி 31-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ  அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்த தயாராக உள்ளோம். ஏற்கனவே அறிவித்த கஜா நிவாரணப் பணிகளுக்கு தடையில்லை. வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரணத்தை வரவு வைக்கும் திட்டம் தொடரலாம் என்று  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.