ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம் – அமைச்சர் ரகுபதி

அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அவசர சட்டம் கொண்டு வந்து உடனடியாக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றினோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம்.

ஆளுநர் தரப்பில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்டாலும் பதிலளிக்க தயாராக உள்ளோம். இந்தியாவுக்கே முன் மாதிரி சட்டத்தை இயற்றியுள்ளோம். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை மட்டுமின்றி ஒழுங்கு முறைகளையும் கொண்டு வர உள்ளோம். அவசர சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததற்கான காரணத்தை ஆளுநரிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment