இடைத்தேர்தலில் தற்போது தணித்தே நிற்கின்றோம்.! அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!

நாங்கள் இடைதேர்தல் களத்தில் தற்போது தனித்தே இருக்கிறோம். இரண்டு மூன்று நாட்களில் எங்களது கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

ஈரோடு கிழக்கு மன்ற சட்டமன்ற இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. ஏற்கனவே அங்கு திமுக தனது கூட்டணி கட்சி வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுள்ளது. அதேபோல் அதிமுகவும் தங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து உள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் என இரு அணிகளாக தங்கள் தேர்தல் பணிகளை செயல்படுத்தி வருகின்றனர். இதில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார்கள் அல்லது இரண்டு தரப்பும் புது சின்னத்தில் போட்டியிடுவார்களா என்ற குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஏற்கனவே அளித்துள்ளது. அந்த மனு உச்சநீதிமன்றத்தால் திங்கள்கிழமை ஏற்றுக் கொள்ளப்பட உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார்கள் என்ற விவரம் முழுதாக நமக்கு தெரிய வரும்.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை முடிந்து முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது முதன்முதலாக ஓர் இடை தேர்தலை சந்திக்கின்றோம். இந்த இடத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்குவோம். திண்டுக்கல் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் எப்படி வென்று காட்டினாரோ? அதேபோல எடப்பாடி பழனிச்சாமி ஓர் நல்ல வெற்றியை பெறுவார் என்று கூறினார்.

மேலும், நாங்கள் தேர்தல் களத்தில் தற்போது தனித்தே இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இரண்டு மூன்று நாட்களில் எங்களது கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் என செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அடுத்ததாக ஓபிஎஸ் பற்றிய கேள்விக்கு, 98 சதவீதம் பேர் எங்களது அணியில் ஒரே அணியாக செயல்பட்டு வருகிறார்கள். என்று குறிப்பிட்டார். மேலும், எங்களது வெற்றி சரித்திரம் படைக்கும் வெற்றியாக இருக்கும் எனவும் நம்பிக்கையோடு தெரிவித்தார். நேற்றைய தினமே நாங்கள் தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டோம் எனவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment