• கடந்த சில வருடங்களாக சென்ற இடமெல்லாம் அற்புதமாக ஆடிய இந்திய அணி இந்த மாதம் இந்தியாவில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்துள்ளது
  • உலக கோப்பை தொடருக்கு முன் தொடரை இழந்துள்ளதால் அணியின் பலவீனம் வெளிப்பட்டு விட்டது என விமர்சகர்கள் பேசி வருகின்றனர்

உலக கோப்பை தொடர் வரும் மே 30-ம் தேதி துவங்கியது இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியதாவது…

உலக கோப்பைக்கு 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால், தற்போது 18 முதல் 20 வீரர்கள் அருமையான தகுதியுடன் உள்ளனர் .மேலும் நாம் மனரீதியாக தயாராக உள்ளோம் அணி வீரர்கள் அனைவரும் தயாராகி விட்டனர் என்று பேசியுள்ளார் அவர்.