ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பாக விருப்பமனு பெற இருக்கிறோம்.! – ஓபிஎஸ் அறிவிப்பு.!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோரை வரவேற்க விருப்பமனு பெற இருக்கிறோம். – ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் திமுக கூட்டணி ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடுகிறார்.

அதே போல, அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் தமாகா போட்டியிட்டு தோல்வியுற்றதால், இந்த முறை  அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், தாங்கள் போட்டியிடவில்லை எனவும், அதிமுகவுக்கு ஆதரவு எனவும் தெரிவித்துவிட்டார். அதனால், அதிமுகவே நேரடியாக களமிறங்க உள்ளது. அதிலும், இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு பிரிவும் தீவிரமாக செயல்பட்டு வருவதால் எந்த தரப்பு அதிமுக சார்பாக போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு, அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் அதிமுக தலைமை செயலகத்தில் விருப்பமனுக்களை அளிக்கலாம் என அறிவித்து இருந்தது. அதற்கு பலரும் தங்கள் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

அதே போல, தற்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அறிவித்துள்ளது. அதன் படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்புவோரை வரவேற்க விருப்பமனு பெற இருக்கிறோம். எனவும்,  எங்களுடன் இணக்கமாக இருக்கக்கூடிய கட்சிகள், எங்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எங்களை நேரில் சந்திக்கிறார்கள். நாங்களும் இன்னும் ஆதரவாளர்களை சந்திக்க உள்ளோம். எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment