சிக்கலான  நேரத்தில் இருக்கிறோம்- பிரிட்டன் ராணி

உலக அளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பிரிட்டனை பொறுத்தவரை 5000-க்கும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இத்தகு இடையில் தான் பிரிட்டன் ராணி எலிசபெத் தொலைக்காட்சி  மூலமாக நாடு மக்களுக்கு உரையாற்றினார்.அவரது உரையில்,கொரோனாவால்  உலக நாடுகள் பலவும் பொருளாதார அளவில் பின்னடைவை சந்தித்திருக்கும் நிலையில், ஒரு சிக்கலான  நேரத்தில் இருக்கிறோம். இந்த கடுமையான சவாலை உலகம் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெற்றது என்பதை பெருமையோடு நினைவுகூரும் ஆண்டாக இது அமையும் என்று நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனவை சுய ஒழுக்கத்தைப் பின்பற்றி  நாம் வெற்றி கொள்வோம். பலருக்கு இது துக்கத்தையும் ,சிலருக்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சவாலான நேரத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் எனது  நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.