தேசிய அளவில் பிரபலமானவர் சூர்யா அவருடன் நாங்கள் அறிமுகமானது மகிழ்ச்சி பிரபல தயாரிப்பாளரின் ஓபன் டாக்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்நிலையில்  உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகி வரும் “சுரரை போற்று “படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் குணீத் மோங்கா அண்மையில் அளித்த பேட்டியில், சூர்யா இந்தியாவிலேயே சிறந்த நடிகர். மேலும்  தேசிய அளவில் பிரபலமானவர் சூர்யா அவருடன் நாங்கள் தமிழில் அறிமுகமானது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Comment