கருப்பு பூஞ்சை நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்

கருப்பு பூஞ்சை நோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளொன்றுக்கு 3லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில்,  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ‘பிளாக் ஃபங்கஸ்’ என்ற ‘கருப்பு பூஞ்சை நோய்’ (மியூகோர்மைகோசிஸ்) ஏற்படுகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கருப்பு பூஞ்சை நோயை எவ்வாறு கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்த பயனுள்ள உதவிக்குறிப்புகளை வழங்கியுள்ளார். இதை பற்றி ட்விட்டரில் பகிர்ந்த அமைச்சர், மியூகோமிகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும் என்றும் இது முக்கியமாக மருத்துவ சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்களை பாதிக்கிறது எனவும் கூறியுள்ளார். நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறனைக் குறைக்கிறது.

கருப்பு பூஞ்சை (மியூகோமிகோசிஸ்) எவ்வாறு வரும் என்பதற்கான அறிகுறிகள்:

  • இணை நோய்கள் – போஸ்ட் டிரான்ஸ்பிளான்ட் வீரியம்
  • வோரிகோனசோல் சிகிச்சை
  • கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய்
  • ஸ்டெராய்டுகளால் நோயெதிர்ப்பு தடுப்பு
  • நீண்ட நாட்கள் ஐ.சி.யுவில் சிகிச்சை பெறுதல்
  • தலைவலி, கண்கள் / மூக்கைச் சுற்றி வலி / சிவத்தல், காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், இரத்த வாந்தி மற்றும் மனநிலையை மாற்றியமைத்தல் போன்ற அறிகுறிகளை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அது அபாயகரமானதாக மாறும் முன்பு கவனிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கருப்பு பூஞ்சை எதிர்த்துப் போராடுவதற்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய விளக்கத்தை ஹர்ஷ் வர்தன் வழங்கியுள்ளவை.

செய்ய வேண்டியவை:

  • ஹைப்பர் கிளைசீமியாவைக் ( உயர் இரத்த சர்க்கரை) கட்டுப்படுத்தவும்.
  • கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு, நீரிழிவு நோயாளிகளில் இரத்த குளுக்கோஸ் அளவை கண்காணிக்கவும்.
  • ஸ்டீராய்டை சரியாக பயன்படுத்த வேண்டும்.
  • ஆக்ஸிஜன் சிகிச்சையின் போது சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் / பூஞ்சை எதிர்ப்பு ஆகியவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும்.

செய்யக் கூடாதவை:

  • அறிகுறிகளையும், எச்சரிக்கை அறிகுறிகளையும் தவறவிடாதீர்கள்.
  • சாதாரண மூக்கடைப்பு ,சைன்ஸ் ,நோயெதிர்ப்பு உள்ளவர்கள் மற்றும் / அல்லது கொரோனா நோயாளிகள் இதை பொருட்படுத்த வேண்டாம்
  • ‘கருப்பு பூஞ்சை நோய்’ தான் என்று அறிவதற்கு அதற்கான சோதனைகளுக்கு தயங்க வேண்டாம்.
  • அதற்கு தேவையான சோதனை மற்றும் சிகிச்சையைத் தொடங்வதற்கான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

author avatar
Dinasuvadu desk