நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்கு ..!5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் …!

நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் அருள் நிதி  நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்கு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்தார்.இந்த வழக்கை  உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.பின்னர் இது தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ராஜா அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீர் நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளில் 5 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.அதில் மதுரை ஆட்சியர்- நடராஜன், ராமநாதபுரம்- வீரராகராவ், தேனி – பல்லவி பல்தேவ், திண்டுக்கல் – வினய், சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆஜராகினர்.அதேபோல் மதுரை எஸ்.பியும்  நேரில் ஆஜராகினர்.