கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட நீர் தமிழகம் வந்தடைந்தது…!

கர்நாடகாவில் 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது.

தமிழகத்திலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வந்ததால் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரவும், குறைவதுமாக இருந்து வந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் கபினி அணைக்கான நீர்வரத்து வேகமாக வருகிறது. கடந்த 19-ஆம் தேதி தமிழகத்திற்கு கபினியில் இருந்து 4,104 கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 2,300 கன அடியும் மொத்த 6,404 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், 19-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீரானது மூன்று நாட்களுக்கு பிறகு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. காலை நிலவரப்படி வினாடிக்கு 5,000 கனஅடி நீர்வரத்து உள்ளது. இந்த தண்ணீர் நாளை மேட்டூர் அணையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
murugan