முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு..!

முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும். இந்த அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

வழக்கமாக ஆண்டுதோறும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஜூன் 1-ஆம்  தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேக்கடி மதகுபகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அணையை திறந்து வைத்தார்.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி இருபோக ஆயக்கட்டு பாசனம் குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசனத்திற்கு வினாடிக்கு 200 கன அடியும், குடிநீர் தேவைக்காக  100 கன அடி வீதம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.