மின் மேம்பாட்டு பணி காரணமாக பெங்களூரில் வருகிற சனிக்கிழமை நீர்வரத்து தடை!

மின் மேம்பாட்டு பணி காரணமாக பெங்களூரில் வருகிற சனிக்கிழமை நீர்வரத்து தடை!

வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரின் பல பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் வரத்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் வாரியம் மின் மேம்பாட்டு பணிகள் காரணமாக பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தண்ணீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எம்ஜி ரோடு, கோரமங்களா, ஜெயநகர், உல்சூர்  ஆகிய இடங்கள் முக்கியமாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இது தவிர மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் நீர்வரத்து தடை செய்யப்படுமாம். அதாவது காவிரி 1 நீர்நிலை கீழ்வரியத்தின் கீழ் நீர் பெறும் அணைத்து பகுதிகளுக்கும் நீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் மேம்பட்டு பணி காரணமாக தடை செய்யப்படுவதால் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், முன்தினமே தண்ணீர் வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube