கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும்! ரஷ்ய ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல்!

கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரஷியாவில் உள்ள வெக்டார் மாநில வைராலஜி மற்றும் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆய்வில், கொரோனா வைரஸ் பரவலை தண்ணீரால் அழிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 90 மணி நேர வைரஸ் துகள்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரில் 24 மணி நேரத்திலும், 99.9 சதவீதம் 72 மணி நேரத்திலும் இறக்கின்றன என்று ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் சில நிபந்தனைகளில் தண்ணீரில் வாழ முடியும் என்றாலும், கடல் அல்லது புதிய நீரில் வைரஸ் பெருக்கமடையாது என்றும், எஃகு, லினோலியம், கண்ணாடி, பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் பரப்புகளில் வைரஸ் 48 மணி நேரம் வரை செயல்பட முடியும் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இன்று நம்மில் அதிகமானோர் கொரோனா வைரஸை அழிப்பதற்கு பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களில் ஒன்று கிருமிநாசினி. வீட்டு கிருமிநாசினிகள் வைரஸுக்கு எதிராக செயல்படுகின்றன என்றும், குளோரின் கொண்ட கிருமிநாசினிகள் 30 விநாடிகளுக்குள் கொரோனா வைரஸின் மேற்பரப்பை முழுமையாக அழிக்க முடியும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.