மாலை நேரத்தில் உங்க குழந்தைகளுக்கு இதை மட்டும் செய்து கொடுத்து பாருங்க! குழந்தைங்க வேண்டாம்னே சொல்லமாட்டாங்க!

சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாலை நேரங்களில் தேநீருடன் சாப்பிட, கடைகளில் தான் உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இந்த உணவுகள் விட நாம் வீட்டில் செய்து கொடுக்கும் உணவுகள் தான் மிகவும் சிறந்தது.

தற்போது இந்த பதிவில் சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • காலிபிளவர் – கால் கிலோ
  • கடலை மாவு – அரை கப்
  •  அரிசி மாவு- கால் கப்
  • மைதா மாவு – 2 மேசைக்கரண்டி
  •  மிளகாய்தூள் – தேவையான அளவு
  •  உப்பு – தேவையான அளவு

 செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் காலிபிளவரை சிறு சிறு பூக்களாக பிரித்தெடுக்க வேண்டும். கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சூடு செய்து கொள்ள வேண்டும்.

பின் கடலை மாவு, அரிசி மாவு, மைதான மாவு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். மேலும், அதனுடன் சூடான எண்ணெய் 1 தேக்கரண்டிக்கும் மேலாக எடுத்து மாயாவுடன்சேர்த்து சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின் பிரித்து வைத்துள்ள காலிபிளாவர் பூக்களை மாவில் நன்கு தோய்த்து எண்ணெயில் இட்டு 2-3 வரை வேக விட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். இவ்வாறு பொரிக்கும் போது, அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். பொன்னிறமாக பொரிந்ததும் எடுத்து விட வேண்டும். இப்பொது சுவையான காலிபிளவர் பஜ்ஜி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.