ஸ்மித் கோலி இருவரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர்- வாசிம் ஜாபர்.!

ஸ்மித் கோலி இருவரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர்- வாசிம் ஜாபர்.!

ஸ்மித் கோலி இருவரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற கேள்விக்கு வாசிம் ஜாபர் பதிலளித்துள்ளார்.

கிரிக்கெட்டில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குபவர்கள் ஸ்மித் விராட் கோலி என்று கூறலாம் ,இவர்கள் செய்த சாதனைகளைப் பற்றி சொல்லியே தெரியவேண்டாம் ,மேலும் 73 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்மித் விளையாடி 26 சதங்கள் மற்றும் 7227 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவரது பேட்டிங் சராசரி 62.84 ஆகா உள்ளது.

மேலும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி கிட்டத்தட்ட 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 சதங்களுடன் 7240 ரன்கள் அடித்து உள்ளார் மேலும் ஸ்மித்தை விட 13 ரன்கள் மட்டும் கூடுதலாக அடித்துள்ளார். இந்நிலையில் மேலும் ரசிகர்களுக்கு மத்தியில் எழும் கேள்வி இருவரில் யார் சிறந்த கிரிக்கெட் வீரர் என்றுதான்.

இந்நிலையில் அந்த வகையில் இந்தியக் கிரிக்கெட் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டது ஸ்மித் விராட் கோலி இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கேட்டதற்கு பதிலளித்த வாசிம் ஜாபர் ஓராண்டு தடை முடிந்த பின்னர் ஸ்மித்தின் விளையாட்டு மிகவும் சிறப்பாக இருந்தது என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஸ்மித் தான் என்று கூறுவேன் என்று கூறியுள்ளார்.