கொரோனாவுக்கு எதிரான போர் – மக்களுக்கு மோடி பாராட்டு.!

மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று பிரதமர் மோடி.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு 4 கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை ஜூன் 30 ஆம் தேதி வரை அதாவது 5 ம் கட்ட ஊரடங்கு நேற்று மத்திய அரசு அறிவித்தது. அதில், ஜூன் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் Unlock 1.0 என்று அடிப்படையில் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், இன்று சரியாக 11 மணி அளவில் மனதின் குரல் அதாவது, மன் கீ பாத் நிகழ்ச்சியில் வானொலி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா குறித்தும் ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் பேசினார். அதில், கொரோனா வைரசுக்கு எதிரான போரை மிகவும் வலுவுடன் இந்திய மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் சேவை மனபான்மை காரணமாகவே இந்த போரில் வலுவுடன் போராட முடிகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், போலீஸ், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

மேலும், பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கப்பட்டு வரும் நிலையில், நாம் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்தியா எப்படி இதை சாதித்தது என்பதைதான் உலகமே உற்றுநோக்கியுள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் தான் வைரஸில் இருந்து நன்மை காத்துக்கொள்ள முடியும். மக்களின் ஒத்துழைப்பே கொரோனா வைரஸிற்கு எதிரான போரில் வெற்றி பெற முக்கிய காரணம் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்