உங்கள் உடல் எடை குறைய வேண்டுமா? அப்ப இதை குடிங்க!

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ். இன்று அதிகமானோர்

By leena | Published: Jul 12, 2020 06:30 AM

உடல் எடையை குறைக்க சூப்பர் டிப்ஸ்.

இன்று அதிகமானோர் தங்களது உடல் எடையை குறைப்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உடல் எடையை குறைப்பதற்காக, எவ்வோளவோ பணத்தை செலவு செய்து செயற்கையான மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது, உடல் எடையை குறைப்பதைவிட, பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில், உடல் எடையை குறைக்க கூடிய அற்புதமான டீயை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தண்ணீர் - 800 மிலி
  • கிரீன் டீ பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
  • பட்டை - 1 துண்டு
  • பிரியாணி இலை  - 3
  •  தேன் - சுவைக்கேற்ப

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் பட்டை, பிரியாணி இலை, கிரீன் டீ பவுடர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து, 5 மிடம் ஊற வைத்து, பின் வடிகட்டி அதனுள் நமக்கு தேவையான அளவு தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த டீயை முதலில் காலையில் எழுந்தவுடன் பருக வேண்டும். மற்ற இருமுறை நாம் சாதாரணமாக தேநீர் அருந்தும் வேளைகளில் பருகலாம்.

பயன்கள்

இந்த டீயை அருந்துவதால், நமது இடுப்பளவு மற்றும் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமானால், இந்த டீயை தினமும் குடிப்பதோடு, தவறாமல் உடற்பயிற்சியையும், டயட்டையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

Step2: Place in ads Display sections

unicc