உடல் எடை குறையணுமா..? அப்ப காபியுடன் இதை கலந்து குடிங்க….!

டீயை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். 

இன்று பலரின் மிகப்பெரிய கவலையே உடல் எடை அதிகரிப்பு தான். இதற்கு காரணம் நமது முறையற்ற உணவு முறைகள் தான். நமது முன்னோர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி, உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத சத்துள்ள உணவுகளை தான் உண்டு வாழ்ந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் உடல் அஆரோக்யத்தை பற்றி சிந்திப்பதில்லை. வாய்க்கு ருசியான மேலை நாட்டு உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது தான் நமது உடலில் தேவையற்ற கொழுப்புகளை உற்பத்தி செய்து, உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது.

இன்று டீ இருந்தால் தன, பலருக்கு அன்றய பொழுது விடிந்துள்ளதாக எண்ணுவர். அந்த வகையில், உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் இந்த டீயை கொண்டு உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.

கருவாப்பட்டை

பட்டையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இது இரத்தத்தில் கலந்துள்ள  சர்க்கரையை குறைக்க உதவுகிறது. பட்டை உடலில் இருக்கும் சர்க்கரையை உடைத்து ஆற்றலாக்கி, கொழுப்புகள் நமது உடலில் படிவத்தை தடுக்கிறது. இதனால், காபியில், சிறிதளவு பட்டை கலந்து குடித்தால், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் நமது உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, இந்த எண்ணெயை பயன்படுத்தி உணவு தயாரித்தால், தேங்காய் எண்ணெய் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை கரைக்கிறது.

தேன்

தேனை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் போது, நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகளை கரைக்கிறது.

காப்பி தூள் தயாரிக்கும் முறை

தேங்காய் எண்ணெய், பட்டை மற்றும் தேன் இவை மூன்றையும் மிக்சியில்  பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை எடுத்து, ஒரு பாத்திலில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தூளை தினமும் காபி குடிக்கும் போது ஆதில் சிறிதளவு கலந்து குடித்தால், நமது உடலில் உள்ள கொழுப்புகள்  குறைவதோடு,உடல் எடையும் குறையும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.