பளபளப்பான முகத்தை பெற வேண்டுமா..? இதோ உங்களுக்காக சூப்பரான “பீட்ருட்” டிப்ஸ்கள்…!!

நம்மில் பலர் மிருதுவான, பளபளப்பான சருமமாக நமது சருமம் இருக்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. இதனால் நாம் நமது வீட்டிலே முகத்திற்கு பூச பலவற்றை அரைத்து உபயோகம் செய்துவருகிறோம். ஆனால், இதுயெல்லாம் சிலருக்கு மட்டுமே சரியாக இருக்கும். சிலருக்கு முகத்தில் அலர்ஜி ஏற்படும் என பயந்து இருப்பார்கள்.

Beetroot
Beetroot Image source wellplated

ஆனால், நாம் நமது சருமத்தை அழகாக வைத்திருக்க சரியான உணவுகளை எடுத்துக்கொண்டாலே போதும் நமது சருமத்தின் தோற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நமது உணவால் பெரிதும் பாதிக்கப்படும். எனவே, தினசரி பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியான அளவு சாப்பிடும் பழக்கத்தை நீங்கள் ஏற்கனவே வளர்த்துக் கொண்டால், கண்டிப்பாக உங்களுடைய தோல், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

Beetroot
Beetroot Image source wellplated

இந்நிலையில், உங்களுடைய சருமம் அழகாக இருக்கவேண்டும் என்றால் நீங்கள் புறக்கணிக்கக்கூடாத ஒரு காய்கறி பீட்ரூட் ஆகும்.  இந்த பீட்ருட்  செரிமானம், சீரான இரத்த அழுத்தம் மற்றும் அதிக ஆற்றல் அளவுகள் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு இந்த காய்கறி உதவுகிறது. இது உங்கள் சருமத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பீட்ருட் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது

Beetroot
Beetroot Image source wellplated

பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உங்கள் செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும். இது உங்கள் நீண்ட கால சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே தினமும் ஒரு பீட்ரூட் சாப்பிடுங்கள்.

வயதான தோற்றம் வரலாம் இளமையாக இருக்கலாம் 

Beetroot
Beetroot Image source wellplated

நம்மில் பலருக்கும் இளமையாக இருக்கவேண்டும் என்பது தான் ஆசை. எனவே, அப்படி ஆசைப்படுபவர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்றால் கண்டிப்பாக பீட்ருட் சாப்பிடுங்கள் இது முதுமையைத் தடுக்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி இருப்பதால் முக சுருக்கங்கள் மற்றும் வறண்ட சருமத்தைத் தடுக்கும். இதில் சிறிதளவு லைகோபீன் மற்றும் ஸ்குவாலீன் உள்ளது, இது சருமத்தின் வயதைக் குறைக்க உதவும்.

உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்

Beetroot
Beetroot Image source wellplated

பீட்ரூட்டில் அதிகப்படியான நீர்ச்சத்து உள்ளது (சுமார் 87%) இது உங்கள் சருமத்தையும், உங்கள் உடலையும் இயற்கையாகவே நீரேற்றமாக வைத்திருக்கும். கோடை காலத்தில் பீட்ரூட்டை ஜூஸ் ஆக செய்து குடிப்பதும் மிகவும் நல்லது. சருமத்திற்கு மட்டுமில்லாமல் அது பல நன்மைகளை கொடுக்கிறது. குறிப்பாக வெயில் காலத்தில் உடலில் உள்ள வெப்பத்தை குறைகிறது.

சருமத்திற்கு பளபளப்பு கொடுக்கும் 

Beetroot face
Beetroot face Image source file image

இதுவரை பீட்ருட் அதிகமாக சாப்பிடதாவர் நீங்கள் என்றால் இனிமேல் தினமும் ஒரு பீட்ருட் சாப்பிடுங்கள். கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் உங்களுடைய சருமம் பளபளப்பாக மாறுவது உங்களுக்கே தெரியும். இதில் வைட்டமின் சி உள்ளது எனவே, பீட்ரூட்டை உட்கொள்வதன் மூலம் அந்த இளமைப் பொலிவைப் பெறலாம்

முகப்பரு வருவதை தடுக்கும் 

Beetroot tips
Beetroot tips Image source file image

பீட்ரூட் உங்கள் உடலில் உள்ள நச்சுகளை சுத்தப்படுத்தவும் உதவும். இது முகப்பரு, பருக்கள் மற்றும் தழும்புகளைத் தவிர்க்க உதவும். பீட்ரூட்டில் பெலட்டின் உள்ளது, அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்பட்ட பைட்டோநியூட்ரியன்ட், இது உடலின் தினசரி நச்சு செயல்பாட்டில் மிகவும் முக்கியமானது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.