குழந்தைகளுக்கு வீட்டில் ஸ்நாக்ஸ் செய்யணுமா? இதோ சூப்பர் டிப்ஸ்..!

By

bonda

நமது வீட்டில் தினமும் மாலையில் தேநீருடன் சேர்த்து ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. இதற்காக நாம் கடைகளில், இனிப்பு மற்றும் கார உணவுகளை வாங்கி சாப்பிடுவோம். இனிமேல் அவ்வாறு செய்யாமல், நமது வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்வது நல்லது.

இவ்வாறு செய்வதால், கடைகளில் தூய்மையற்ற முறையில் செய்யப்படும் உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளலாம். தற்போது இந்த பதிவில், கோதுமை மாவை வைத்து இனிப்பு போண்டா செய்வது எப்படி என்று  பாப்போம்.

கோதுமை மாவில் நமது  உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே  போல் பாலிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இனிப்பு போண்டா செய்யும் முறை 

தேவையானவை

  • பால் – ஒரு கப்
  • கோதுமை மாவு – 1 கப்
  • ஏலக்காய் (பொடித்தது) –  இரண்டு
  • முட்டை – ஒன்று
  • வெல்லம் ஒரு கப்
  • உப்பு – சிறிதளவு

செய்முறை 

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.  கொதித்தபின், நமது அனைவரது  வீட்டிலுமே குழி கரண்டி இருப்பது வழக்கம். அந்த குழி கரண்டியில் முதலில் மாவை ஊற்றி எண்ணெயினுள் வைக்க வேண்டும். பின் மாவு சற்று பொன்னிறமானதும் கரண்டியை பிரட்டினால், ஊற்றிய மாவு அழகாக உருண்டையாக வந்துவிடும்.

இவ்வாறு ஒவ்வொரு தடவையும் ஊற்றி  உருண்டையாக   போண்டாவை செய்ய வேண்டும். பின் அந்த போண்டாக்கள் பொன்னிறமாக வரும் வரை நன்கு வேக விட்டு பின்பு எடுக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு போண்டா தயார்.