இப்படி செய்தால் போதும்.. 5 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தா இலவசம்!

இப்படி செய்தால் போதும்.. 5 மாதங்களுக்கு ஆப்பிள் மியூசிக் சந்தா இலவசம்!

ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை பெறுவதற்கான வழிமுறைகளை காணலாம்.

ஆப்பிள் போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் உபயோகிக்கும் செயலி, ஆப்பிள் மியூசிக். இந்த செயலின்மூலம் நாம் பாடல்களை கேட்டு மகிழலாம். ஆனால் இதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கு மாதம் 49 ருபாய் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் செலுத்தாமல் கேட்டால், ஆப்லைனில் பாடல்கள் கேட்பது, குறிப்பிட்ட அளவில் பாடல்களை ஸ்கிப் (skip) செய்தால் விளம்பரம் வருவது, உள்ளிட்ட பல தொல்லைகள் இருக்கும்.

இதனால் பலரும் இலவசமாக ஆப்பிள் மியூசிக் வசதி கிடைக்குமா என ஏங்கி வருகின்றனர். மேலும் ஆப்பிள் இதற்கான இலவச சந்தாக்களை அறிவித்தது. அது, புதிய பயனர்களுக்கு மட்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆப்பிள் நிறுவனம், ஆப்பிள் மியூசிக்கான 5 மாத இலவச சந்தாவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஆப்பிள் மியூசிக்-ன் 5 மாதம் இலவச சந்தாவை பெற முதலில் உங்களின் iPhone, iPad or iPod-ல் ஷாசம் (Shazam) செயலியை பதிவிறக்கம் செய்யவும். அந்த செயலின்மூலம் பாடலின் ஒரு வரியை கேட்பதன்மூலம் அந்த பாடலின் பெயரும், அந்த பாடல் குறித்த தகவலும் நமக்கு தெரியும். செயலியை பதிவிறக்கியப் பின், ஏதாவது ஒரு பாடலை கண்டுபிடிக்கவும்.

அந்த பாட்டின் பெயர், அந்த பாட்டை எழுதியவர், உள்ளிட்ட குறிப்புகள் தெரியும். மேலும், அதனை கேட்கவும் வசதி இருக்கும். அப்பொழுது நீங்கள் ஆப்பிள் மியூசிக் வழியாக கேட்பதை கேட்கும் வசதியை தேர்வு செய்யவேண்டும். அதன்பின் அந்த செயலிக்குள் செல்லும். பின்னர், 5 மாத இலவச சந்தா சலுகையைக் காண்பிக்கும். அவ்வாறு உங்களின் 5 மாத இலவச சந்தாவை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube