வரம் வேண்டுமா.? 4 அடி உயர முள்படுக்கையில் தவம்செய்து அருள்வாக்கு சொல்லும் பெண்சாமியார்.!

  • திருபுவனம் அருகே பெண் சாமியார் ஒருவர் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்து அங்குள்ள பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
  •  4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்த பின் அதில் ஏறி நாராராணி அம்மையார் தவம் செய்து அருள்வாக்கு கூறினார்.

சிவகங்கை மாவட்டத்தில் திருபுவனம் அருகே லாடனேந்தல் முத்து மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் மார்கழி மாதம் வழக்கமாக பெண்சாமியார் ஒருவர் நாகராணி அம்மையார் அருள்வாக்கு கூறுவார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாரியம்மன் கோவிலில் பூஜை நடைபெற்று, உடைமுள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகை முள்ளுகளை எடுத்து 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டு, பெண் சாமியார் அந்த முள்படுக்கையில் தவம்செய்து அருள்வாக்கு கூறினார்.

பின்னர், முள்படுக்கைக்கும் மற்றும் பெண்சாமியாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்த பின் அதில் ஏறி நாராராணி அம்மையார் தவம்செய்து அருள்வாக்கு சொன்னார். அப்போது, பெண் சாமியாரிடம் அங்குள்ள பக்தர்கள் அவரவர் வேண்டுதலுக்கு ஏற்ப குழந்தை பாக்கியம், திருமண வரம், வேலையின்மையை போன்றவற்றை வரமாக கேட்டு ஏராளமான பக்தர்கள் அந்த பெண்சாமியாரிடம் அருள்வாக்கு பெற்றனர்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்