அசத்தல் திட்டம்.! உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசம்.!

அசத்தல் திட்டம்.! உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசம்.!

  • டெல்லி ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரயில்வே நிலையத்தில் உடற்பயிற்சி செய்தால் பிளாட்பார்ம் டிக்கெட் இலவசமாக வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இந்த ரயில்வே நிலையத்தில் இயந்திர மூலம் உடற்பயிற்சி மேற்கொண்டால் இலவசமாக டிக்கெட் என்ற முறை உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பயணிகளிடையே உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் தற்போது டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு சிறுவர் அந்த இயந்திரத்தின் முன்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இணையத்தில் ரயில்வே துறை பதிவிட்டுள்ளது. அதில் நீங்கள் 180 வினாடிகளில் 30 முறை up-down செய்தால், இலவச பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு நீங்கள் தகுதி பெறுவீர்கள் என ரயில்வே அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube