அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்…!

அங்கன்வாடியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி முதல், அங்கன்வாடிகள் திறக்கப்பட்ட நிலையில், 2 முதல் 6 வயது வரையிலான குழந்தைக்ளுக்கு சத்துணவு மட்டும் காலை 11.30-12.30க்குள் தரவேண்டும் என்றும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் அருகே உள்ள பூதங்கட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றன. இந்த அங்கன்வாடி மையத்தில் உணவருந்திய 17 குழந்தைகளுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதனை எடுத்து இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டதில் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை கடலூர் ஆட்சியர் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.