விவோ நெக்ஸ் : சில தகவல்கள் ..!

விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விவோ நெக்ஸ் என அழைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அபெக்ஸ் கான்செப்ட் என அழைக்கப்பட்டு இருந்தது.
Image result for விவோ நெக்ஸ்கடந்த வாரம் விவோ நிறுவனம் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போனின் வெளியீடு ஜூன் 12-ம் தேதி ஷாங்காய் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்தது. அந்த வகையில் விவோ நிறுவனம் தனது அபெக்ஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image result for vivo nexபுதிய விவோ ஸ்மார்ட்போனில் 91 சதவிகித ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, ஹால்ஃப்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் தொழில்நுட்பம் மற்றும் பாப்-அப் வகையிலான செல்ஃபி கேமரா கொண்டிருக்கும். முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கான்செப்ட் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
Image result for vivo nexமுன்னதாக முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட்ட நிலையில், சீன வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் புதிய டீசரில் புதிய ஸ்மார்ட்போன் நெக்ஸ் என அழைக்கப்படுவது உறுதியாகியுள்ளது. புதிய டீசரின் படி விவோ அபெக்ஸ் ஸ்மார்ட்போனில் அதிநவீன தொழில்நுட்பம், ஹால்ஃப்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மற்றும் இதர அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
Image result for vivo nexஇதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனின் பிரீமியம் வேரியன்ட் பாப்-அப் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 256 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் CNY 4999 (இந்திய மதிப்பில் ரூ.52,600) என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடல் CNY 3798 (இந்திய மதிப்பில் ரூ.40,000) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை 5.99 இன்ச், 18:9 ரக டிஸ்ப்ளே, 8 எம்பி பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment