விவேக் மரணம்.., இன்று மாலை 5 மணிக்கு இறுதிச்சடங்கு..!

மாலை 5 மணிக்கு விவேக் உடல் தகனம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாக  நடிகர் மயில்சாமி தகவல் தெரிவித்தார்.

நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு  நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

இதைத்தொடர்ந்து, நடிகர் விவேக்கின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்காக விவேக் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விவேக்கின் உடலுக்கு ரசிகர்களும், திரைபிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாலை 5 மணிக்கு விவேக் உடல் தகனம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்து இருப்பதாக  நடிகர் மயில்சாமி தகவல் தெரிவித்தார்.

author avatar
murugan