பார்வையிட்ட அதிகாரிக்கு…! ” பாயச”த்துடன் படையல்…!!!அசத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் …!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அடிப்படை வசதிகள் இன்றி இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்ற அதிகாரி, ஆசிரியர்கள் கொடுத்த தடபுடல் விருந்தில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

பேர்ணாம்பேட் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர், முறையான கழிவறை உள்ளிட்ட வசதிகள் இன்றி மாணவர்கள் தவிக்கும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தது. இந்த நிலையில் வட்டார கல்வி அலுவலர் மோகன் அங்கு ஆய்வுக்குச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு ஆசிரியர்கள் தலைவாழை இலை போட்டு தடபுடல் விருந்து வைத்துள்ளனர். மேலும் குரூப் போட்டோவும் எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here