கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி…டிவிட்டரில் மோதி கொள்ளும் ரசிகர்கள்.!!

கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி…டிவிட்டரில் மோதி கொள்ளும் ரசிகர்கள்.!!

virat kohli gautam gambhir fight

நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் இருக்கும் ஏகனா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கிடையில், இப்போட்டியில் பெங்களூரு அணி சுலபமாக வெற்றி பெற்றாலும், களத்தில் விராட் கோலியின் கடும் ஆக்ரோஷம் நிறைந்து இருந்தது.

இதனால் லக்னோ, பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், போட்டி முடிந்த பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலியும்  லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீரூம் பயங்கரமான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள்.

லக்னோ அணியின் இன்னிங்ஸின் போது  க்ருனால் பாண்டியாவின் கேட்சை விராட் கோலி பிடித்தார். கேட்சை பிடித்த பின் லக்னோ ரசிகர்களை பார்த்து விராட் கோலி கொடுத்த ரியாக்‌ஷன் இணையத்தில் வைராகி வருகிறது. கடந்த  ஏப்ரல் 10-ம் தேதி பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில், லக்னோ அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மைதானத்திற்குள் வந்து பெங்களூர்  ரசிகர்களை பார்த்து, வாயில் விரலை வைத்து “சத்தம் வரக்கூடாது” என செய்கை காட்டி இருந்தார்.

அதனை தொடர்ந்து  தற்போது விராட் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்றய போட்டியில் ஒரு ரியாக்‌ஷன்  கொடுத்தார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி என அவருடைய ரசிகர்கள் டிவிட்டரில்  பதிவிட்டு வருகிறார்கள். மேலும் கம்பீர் ரசிகர்கள் விராட் கோலி செய்தது தவறு என மாற்றி மாற்றி கருத்துக்களில் மோதி வருகிறார்கள்.

மற்றோரு பக்கம் மைதானத்தில் வாக்கு வாதத்தில் இருவரும் ஈடுபட்டதால் கிரிக்கெட் நெட்டிசன்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இது தவறான செயல் என பதிவிட்டு வருகிறார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube