34.4 C
Chennai
Friday, June 2, 2023

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

200 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு.!

அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய...

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை...

விராட் கோலி என அதிர்ந்த மைதானம்..! கம்பீரை போல செய்கை காட்டிய லக்னோ வீரர்..! வைரல் வீடியோ இதோ…

லக்னோ வீரர் நவீன் உல் ஹக், ரசிகர்களை பார்த்து அமைதியாக இருக்குமாறு செய்கையால் தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

16 வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் 175 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணியை லக்னோ அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் லக்னோ அணி 177 என்ற இலக்கை எளிதில் கொல்கத்தா அணியை அடையவிடாமல் வைத்திருந்த நிலையில் ரின்கு சிங் தனது அதிரடியால் ரன்களை குவித்தார்.

லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் நான்கு ஓவர்கள் வீசியதில் 46 ரன்களை வாரி வழங்கினார். இறுதி ஓவரில் 20 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட் கூட எடுக்க தவறிய நிலையில், மைதானத்தில் உள்ள ரசிகர்கள் நவீன் பந்து வீச வந்தபோது ‘கோலி கோலி’ என  கோஷம் எழுப்பி அவரை கிண்டல் செய்தனர்.

இதனால் மனமுடைந்த அவர், ரவி பிஷ்னோய் ரஹ்மானுல்லா குர்பாஸ் அடித்த பந்தை கேட்ச்சைப் பிடித்த பிறகு ரசிகர்களை பார்த்து தனது உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்குமாறு செய்கையால் தெரிவித்தார். அவரது இந்த செய்கையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.