“தன் கையிலே தன் தந்தையை இழந்த விராட்”ஆத்ராகாரின் அதிர வைக்கும் மறுபக்கம்…!!!!

இந்திய அணியின் கேப்டனும்,கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவத்தை  கூறியுள்ளார்.இது அவருடைய ரசிகர் மத்தியிடையே அவரின் மிதான அன்பு அதிகரித்துள்ளது அதற்கு காரணம் அவரின் இந்த தருணம் தான்

Related image

தன் கையிலேயே தன் தந்தையின் உயிர் போன அந்தத் தருணத்தை என்னால் மறக்க முடியாது என்று விராட் கோலி மனதை உருக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விராட் கோலிக்கு  தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.எப்பொழுதும் விராட் கோலி எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசும் இயல்பான குணம் கொண்டவர் ஆனால், அவரின் ஒரு சில குறிப்பிட்ட தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் இதுவரை வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் நான் கதறி அழுத என்னை மிகவும் தன்னம்பிக்கை கொண்ட தருணமாக மாற்றிய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

Related image

 

அதில் நான் கடந்த 2006-ம் ஆண்டு  டெல்லி ரஞ்சி அணிக்காக விளையாடினேன். டெல்லி அணிக்கும், கர்நாடக அணிக்கும் இடையே ரஞ்சி கோப்பை போட்டி நடந்தது  அன்று களமிறங்கி 40 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தேன்.மறுநாள் நான் பேட்டிங் செய்ய வேண்டும். மைதானத்தில் நீண்ட நேரம் அணி வீரர்களுடன் இருந்து பேசிவிட்டு  அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.

வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் என் அப்பாவிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுத் அவர் துடித்தார். உடனே எழுந்து நான் சென்று அவரைத் தாங்கிப்பிடித்தேன். என் அப்பாவை அம்மாவிடம் விட்டுவிட்டு பக்கத்து வீட்டுக்கார்களை உதவிக்கு அழைத்தேன் பிறகு டாக்டரை போனில் அழைத்தேன் ஆம்புலன்ஸ்சுக்கும் போன் செய்தேன். அது இரவு நேரம் என்பதால் ஒருவர் கூட எழுந்து உதவிக்கு வரவில்லை.

Related image

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. ஆம்புலன்ஸ் வருவதற்கு  முன்என் அப்பாவின் உயிரும் என் கையிலேயே பிரிந்தது அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது நான் கண்ணீர் விட்டு கதறிய நேரம் அது.அதன்பின் எனக்குள்ளே தன்னம்பிக்கை அதிகரித்தது கிரிக்கெட் மீதான என் பார்வை வலுப்பெற தொடங்கியது. என்னுடைய கனவுகளையும்  என் அப்பாவின் கனவுகளையும் நனவாக்க என்ன செய்யவேண்டுமோ அதற்காக நான் கடுமையாக உழைத்தேன் என் சக்தி முழுவதையும் செலவு செய்தேன் என்று கூறினார்.

Related image

அவருடைய இந்த பதிவு அவருடைய உழைப்பையும்,தன் தந்தையின் மீது கொண்ட அன்பும் தெரிந்தது எத்தனை ஆத்ரகாரனாக இருந்தாலும் அன்பென்றால் அனில் குட்டி கூட கண்ணீர் வடிக்கும் என்பதை போன்றே நம் விராட் எத்தனை கோபகாராக இருந்தாலும் அவருடைய இந்த மறுபக்கம் அவரின் தன்னமிக்கையை கண்டு பூரிக்க வைக்கிறது மனதை..!!

Related image

தன் அப்பாவின் உடலை வீட்டில் வைத்து விட்டு அடுத்த நாள் போட்டியில் தன் டெல்லி அணி சார்பாக களமிரங்கினார் விராட் என்பது குறிப்பிடத்தக்கது.கேப்டன் விராட் கோலி குறித்த ஆவணப்படம் இன்று நேஷனல் ஜியோகிராபி சேனலில்இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment