விராட் கோலி தான் நம்பர் 1 – முகமது யூசுப் ஓபன் டாக்..!!

விராட் கோலி தான் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் அவர் செய்த சாதனைகளை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். விராட் கோலி, இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்களை விளாசியுள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை கோலி ஓய்வு பெறுவதற்கும் முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விராட் கோலியை பற்றி பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விராட் கோலியை புகழ்ந்து கூறியுள்ளார்.

இதில் “நான் விராட் கோலி பயிற்சி எடுக்கும் பார்த்ததில்லை. ஆனால் டுவிட்டரில் சில பயிற்சிகள் மட்டும் வீடியோக்களை அல்லது சில இடங்களில் பார்த்துள்ளேன். இன்றைய காலக்கட்டத்தில், அருமையான மாடர்ன் கிரிக்கெட் என்றால் என்ன என்று என்னிடம் கேட்டால், பயிற்சி பற்றிதான் நான் சொல்வேன். வீராட் கோலியின் அபாரமான ஆட்டத்திற்குப் பின்னால் அவரது பயிற்சிதான்இருக்கிறது. இன்றயை கிரிக்கெட் காலகட்டத்தில் விராட் கோலி தான் நம்பர் 1 “என்றும் கூறியுள்ளார்.