விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் பேட்டிங்கில் "மிரட்டுவார்" - டிவில்லியர்ஸ்

விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று ஏபி

By bala | Published: Jul 02, 2020 03:59 PM

விராட் கோலி இன்னும் 5 ஆண்டுகள் பேட்டிங்கில் மிரட்டுவார் என்று ஏபி டிவிலியர்ஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டிவிலியர்ஸ் பல சாதனைகளை தென்னாப்பிரிக்காக படைத்துள்ளார் மேலும் ஐபிஎல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற பேட்டியில் அவரிடம் விராட் கோலி பற்றி கேட்டதற்கு இந்த ஊரடங்கு காலம் விராட் கோலிக்கு நன்றாக இருக்கவும் இதன் மூலம் அவர் புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் திரும்ப முடியும் அடுத்த ஐந்து ஆண்டுகள் அவரிடம் பெரிய விஷயங்களை எதிர்பார்க்கிறேன் ஒரு பேட்ஸ்மேனாக விராட்கோலி என்னைவிட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறார் ஐபிஎல் காலங்களில் 15 ஓவர்கள் வரை விளையாட வேண்டும் என்று விரும்புவார் என்றும் கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc