கோலி தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்.! ஆஸ்திரேலிய அணி கேப்டன் புகழாரம்.!

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 பிரிவுகளின் கேப்டன் ஆரோன் பின்ச், அண்மையில் குறிப்பிடுகையில், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலிதான் என தெரிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.

தோனியிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பெற்ற பிறகு கோலி இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை குவித்துள்ளார். 32 வயதான அவர் இன்னும் அதிக சாதனைகளை நிகழ்த்துவார்.

உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், டி20 என அனைத்து வகையிலும் 50க்கு மேல் சராசரி வைத்துள்ளார் என கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் புகழ்ந்துள்ளார்.