விராட் கோலி, கங்குலி மீது புகார் அளித்துள்ள ம.பி கிரிக்கெட் கிளப் உறுப்பினர்.!

விராட் கோலி, கங்குலி போன்றோர் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதாக

By manikandan | Published: Jul 05, 2020 07:05 PM

விராட் கோலி, கங்குலி போன்றோர் பல்வேறு பதவிகளில் வகித்து வருவதாக மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ அதிகாரி டி.கே.ஜெயின்-க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ விதிகளின் படி, பிசிசிஐ-யில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், சில வீரர்கள் இரண்டு பதவிகளில் வகித்து வருகின்றனர் என மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா பிசிசிஐ நிர்வாகி டி.கே.ஜெயின்-க்கு இமெயில் மூலம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதாவது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்திய அணியில் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாகவும், தனியார் நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பிலும் வகித்து வருகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல, பிசிசிஐ தலைவர் கங்குலியும் இரட்டை பதவி வகித்து வருகிறார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகமான பிசிசிஐயை ஒழுங்குபடுத்தவேண்டும் என மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் கிளப் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc