கிரிக்கெட் கடவுளின் சாதனையை முறியடித்து.! விராட் புதிய உலக சாதனை ..!

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோத உள்ளது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
இதில் தற்போது இந்திய அணி தரப்பில் 305/4 விக்கெட் இழப்பிற்கு ரன் குவித்து வருகின்றது.இதில் கேப்டன் விராட் உலக சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்களை கோலி  அடித்து 11,000 ரன்களை பூர்த்தி  செய்து கடந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.குறைந்த   ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்த ஓரே வீரர் என்ற பெருமையை தட்டி சென்றார்.மேலும் கிரிக்கெட் கடவுள் சச்சினின் சாதனையையும் முறியடித்துள்ளார்

author avatar
kavitha