#Viral:இனி எலான் மஸ்க் இல்லை,”சிலோன் மஸ்க்” – Snapdeal அதிகாரியின் வைரல் கருத்து!

உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், சமீபத்தில் பிரபல சமூக வலைதளைதளமான ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கியிருந்தார்.இதனால்,தற்போது 7 கோடியே 34 லட்சம் டிவிட்டர் நிறுவன பங்குகள் அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இறுதி ஆஃபரை ஏற்காவிட்டால்:

இதனைத் தொடர்ந்து,எலோன் மஸ்க்,ட்விட்டரை 43 பில்லியன் டாலருக்கு ( கிட்டத்தட்ட 3 லட்சம் கோடிக்கு மேல்) தானே வாங்கிக்கொள்வதாக ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லருக்கு எழுதிய கடிதத்தில், தெரிவித்திருந்தார்.மேலும்,9% பங்குகளுடன் ட்விட்டரின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் மஸ்க்,இறுதி ஆஃபரை ஏற்காவிட்டால் தான் ஒரு பங்குதாரராக தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நெட்டிசன்கள் கருத்து:

இதற்கிடையில்,எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு விரும்பிய நிலையில்,அதனை வாங்குவதற்குப் பதிலாக மஸ்க்,45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும்  இலங்கையை வாங்குமாறு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்,Snapdeal நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பாஹ்ல் பரிந்த கருத்து ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

சிலோன் மஸ்க்:

அதாவது,தனது ட்விட்டர் பக்கத்தில் குணால் கூறியதாவது:”எலோன் மஸ்க்கின் ட்விட்டர் ஏலம் 43 பில்லியன் டாலர் ஆகும்.ஆனால்,இலங்கையின் கடன் 45 பில்லியன் டாலர்கள்தான்.எனவே,அவர் அதை வாங்கி தன்னை “சிலோன் மஸ்க்” என்று அழைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.