இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ! வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்த விஸ்வாசம் பட பிரபலம்!

இணையத்தில் வைரலான ஆபாச வீடியோ! வீடியோ குறித்து வருத்தம் தெரிவித்த விஸ்வாசம் பட பிரபலம்!

கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து  வெளியிட்டுள்ளனர்.

நடிகை அனிகா, அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன்  மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமூக வலைத்தளங்களில், தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகை அனிகா அரைகுறை உடையில், ஆபாச நடனம் ஆடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், அனிகாவை விமர்சித்து கருத்துக்கள் பதிவிட்டனர்.

இந்நிலையில், இந்த வீடியோ குறித்து  நடிகை அனிகா கூறுகையில், கருப்பு உடையில் நான் ஆடுவது போன்ற வீடியோ வலைதளத்தில் வந்துள்ளது. இந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. இந்த வீடியோவை மார்பிங் செய்து  வெளியிட்டுள்ளனர். உண்மையில் என்னை பார்ப்பது போன்றே இந்த வீடியோவை மர்ப்பிங் செய்துள்ளனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு தகுதியான வீடியோ இல்லை. எல்லை மீறும் வகையில் காணப்படுகிறது. என இந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube